0 How To Apply Solvency Certificate In Tamil | சொத்து மதிப்பு சான்று | செ...

0 2000 ஆயிரம் தாளால் உண்மையில் பொருளாதார வீழ்ச்சி அடையுமா?

2000 ஆயிரம் தாளால் உண்மையில் பொருளாதார வீழ்ச்சி அடையுமா?

நிச்சயம் இந்திய பொருளாதாரத்தில் குறிப்பிட்ட மாற்றம் இருக்கப்போகிறது என்பதில் மாற்றுகருத்து இல்லை. அது வளர்ச்சியா வீழ்ச்சியா என்பதை குறைந்தது மூன்று ஆண்டுகளாவது கழிந்தால் தான் உறுதியாக சொல்ல முடியும். ஆனால், எனது பார்வையில் இரண்டுவிதமான பின்னடைவை சாதாரன நடுத்தரவர்க்கம் சந்திக்க இருக்கிறது என்பது மட்டும் புரிகிறது.

முதலில் சாதகம் என்ன என்றால் 500 கோடியை கூட, இரண்டு சூட்கேசில் தினித்து அசால்டாக டிரான்ஸ்போர்ட் செய்யலாம். மற்றும் ரூபாய் தாள்களின் தயாரிப்பு செலவு குறிப்பிடதக்க வகையில் குறைய வாய்ப்பு இருக்கிறது. இது மட்டும் தான் சாதகமா? விவரம் தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் தெரிவிக்கட்டும்.

சரி பாதகமாக பயமுறுத்தும் காரணங்களை பார்ப்போம்.


1.முதலில் 2000 ரூ நோட்டு பெரும்பாலும் மேல்தட்டு மக்களின் கைகளில் தான் புரளபோகிறது. இனி எலக்சன் டியூட்டிகளிலும், கஸ்டம் டியூட்டிகளலும் அதிகப்படியான பண புழக்கத்தை கட்டுபடுத்த புதிய செக்யூரிட்டி முறைகளை தேடி ஓடும் அதிகாரிகளை நினைத்து பார்க்க வருத்தமாகவும் கொஞ்சம் ஆறுதலாகவும் இருக்கிறது.

அதேபோல் பதுக்கலுக்களுக்காக டாலரையும், கோல்டையும், லேண்டையும் தேட வேண்டியிருக்காதோ என தோன்றுகிறது. 5000, 10000 ரூ தாள்கள் நிறுத்தப்பட்டது ஏன் என்று தெரியாதவர்களுக்கு இதன் பிண்ணனி தெரிய வாய்ப்பில்லை.

2.சிறு வணிக நிறுவனங்கள், ஹோட்டல்கள், பேருந்துகளில் பெரும் சில்லரை தட்டுப்பாடு பிரச்சனை வரும். அதன் நிறுவனர்கள் முன்கூட்டிய நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும். சாதரணமாக நால் ஒன்றுக்கு 10 பேர் 2000 ரூ தாளை நீட்டினாலும் குறைந்தபட்ச இருப்பாக கல்லா பெட்டியில் 20,000ரூ வைத்திருக்க வேண்டும். அது குறு, சிறு, பிளாட்பார, நடமாடும் வாகனங்களில் விற்பனை செய்யும் ஏழை வியாபாரிகளுக்கு எப்படியான பாதிப்பை ஏற்படுத்துமோ என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.

3.மிக முக்கியமான விசயம் என்னவென்றால் 2016 ஆன இன்றைய நாளிலிருந்து "அடுத்த மூன்று வருடங்களில் மக்களின் மிகை நுகர்வு கலாச்சாரம் வெகு வேகமாக பரவும்". ஆன்லைன் சாப்பிங்களும், பெரிய சூப்பர்மார்கெட்களும், கார், மின்னனு, ஜிவல்லரி ஸோரூம்களும் அதிகளவில் தோன்றி மக்களின் உழைப்பை போதும் போதும் என்ற அளவிற்கு சுரண்டி தங்கள் வயிற்றை வளர்க்கும்.

மிகை நுகர்வு கலாச்சாரம் -

அப்படியென்ன அபத்து இதில் இருக்கிறது என்பதை கொஞ்சம் கவனாக புரிந்துகொள்ளுங்கள். பொதுவாக நம் தேவைக்காக ஒரு கிலோ பாசிப்பருப்பு வாங்குவதற்காக நம்ம தெருமுனை அண்ணாச்சிகடைல வாங்கும் போது பெரிய அளவில் மனதில் ஒன்றும் தோன்றாது. ஆனால், அதே ஒரு கிலோ பாசிப்பருப்பை ஒரு பெரிய சூப்பர் மார்க்கெட்டில் வாங்குவதற்காக நாம் செல்வோமேயானால், முதலில் உள்ளே நுழைந்ததும் பெப்சிக்கோ, கோக்கிற்கோ ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்று குவித்து வைத்திருக்கும் பாட்டில்களை பார்த்ததும் உடனே மனசுக்குள் இருக்கும் அவசர புத்தி நம்மை அந்த பாட்டிலை வாங்க வைத்துவிடும். அதுபோலவே பருப்பை தேடும் நேரத்தில் குறைந்தது மூன்று இதர பொருட்களையிம் வாங்கி நம் பேஸ்கட்டில் போட்டு விடுவோம். வெறும் கைகளால் பொருட்களை எடுக்கும் போது நாம் அதிக எண்ணிக்கையில் எடுக்க மாட்டோம். ஆனால், ஒரு பேஸ்கட் கையில் இருந்தால் பார்ப்பதையெல்லாம் எடுத்து அதில் போட்டுக்கொண்டு பில் கவுண்டருக்கு செல்வோம் என்ற யுக்தியையே பெரும் நிறுவனங்கள்  வெகு காலமாக கையாண்டு வருகிறது.

ஆக, ஒரு கிலோ பருப்பு வாங்க சென்ற நாம் கூடவே நன்கு பொருட்களையும் சேர்த்து பில் அழுது வாங்கி வருகிறோம். இதில் கொடுமை என்னவென்றால் நான்கில் மூன்று பொருட்களை நாம் போதுமான அளவு பயன்படுத்தாமல் வீனாய் இடத்தை அடைத்து வைக்க போகிறோம்.

இதே யுக்தியை தான் ஆன்லைனில் பெண்டிரைவ் வாங்க சொடுக்கினால் 5400 ரூக்கு கூடுதலாக டச் மொபைல் போனையும் ஆர்டர் செய்து விடுகிறோம். மனோவியல் ரீதியாக இது எதார்த்த உண்மை என்பதை புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

சரி இது வெறும் ஆயிரம், ஐநூறில் மட்டுமா என்றால் கொஞ்சம் உங்கள் வீட்டின் ஹாலில் சுற்றி பாருங்கள் 23,000 ரூபாய்க்கு சோபாவும், 45,000ரூபாய்க்கு டீவியும், பெட்ரூமில் 35,000 ரூபாய் கட்டில், டைனிங் டேபில் இன்னும் இனைப்பிகளாய் டேபில் மேட்டிலிருந்து தொப்பையை குறைக்கும் ரன்னர் வரைக்கும் கன்னதையும் சகட்டுமேனிக்கு வாங்கி குவித்திருப்பதை காணுங்கள். நிஜமாலும் இத்தகைய பொருட்கள் அனைத்தும் இவ்வளவு விலையில் நாம் கண்டிப்பாக வாங்கிதான் ஆக வேண்டுமா?

கார் வாங்கனுமா? மிக குறைந்த டவுன் பேமென் வெறும் 20,000 கொடுத்தால் அடுத்த சில மணி நேரங்களில் வீட்டு வரந்தாவில் கொண்டு போய்விடலாம். இனி மாதா மாதம் லோன் டியூ கட்டனும் என்பதை அந்த சில நிமிடங்களில் யோசிக்காமல் வாங்கி சிக்கி தினறி சீரளிபவர்களே அனேகம் பேர்.

இவ்வாறு உண்மையான தேவைக்கு என்றில்லாமல் சகட்டு மேனிக்கு பொருட்களை வாங்கி தினிப்பதையே மிகை நுகர்வு என்கின்றார்கள்.

சரி, 2000 ரூ நோட்டு வெளியிட்டதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்கின்றீர்களா?? வருகிறேன் பொருங்கள்.

பொதுவாக மால்களிலும், ஆன்லைனிலும் பொருட்களை சகட்டு மேனிக்கு வாங்குபவர்கள் கிரெடிட்/டெபிட் கார்டுகளையே பயன்படுத்துகிறார்கள். கையில் கத்தையாக ரூபாய் நோட்டுகளை எண்ணி கொடுப்பதற்கும் ஆன்லைனில் கார்டுகளை சுவேச் பன்னி பணம் செலுத்துவதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. அதில் எவ்வளவு தொகையை செலுத்தினாலும் அங்கலாப்போ அல்லது சுய முன் ஜாக்கிரதை உணர்வுகளோ தூண்டப்படுவது இல்லை என்பதே மன-உடல் ரீதியான சித்தாந்தங்கள் ஆகும்

டெல்லி, மும்பை, பெங்கலூரு நகரங்களில் வசிக்கும் உங்கள் சக நண்பர்களின் வாழ்க்கை முறைக்கு கொஞ்சம் உங்கள் புத்தியை கொண்டு சென்று வாருங்கள். நிலைமை எவ்வளவு வேகமாக உங்களை நெருங்கி கொண்டிருக்கிறது என்பது புரிய வரும்.

ஆக, கையில் ரொக்கமாக வைத்து செலவு செய்வதற்கும் மாறாக மின்னனு டிரன்சேக்சன் செலவு செய்வதற்குமான வித்யாசத்தை பெரு முதலாளிகள் கண்டறிந்து தங்கள் யுக்திகளால் பெரும் இலாபம் அடைகின்றார்கள்.

பெரும்பாலும் இத்தகைய கிரெடிட் கார்டு செலவுகளில் ஐ.டி. கார்ப்பரேட் நிறுவனங்களில் பணி புரிந்த "இளசுகளின் சீரளிவு கதைகளை 2010 - 13 ஆண்டுகளில் வாசித்திருப்பீர்கள். அதேபோல ஒரு நிலைமையை சாமானியன் கையில் இருக்கும் இந்த 2000 ரூபாய் தாளும் ஏற்படுத்தும்." என்பதே மக்களின் பயத்திற்கு காரணம்.  ஏநெனில் அரசு அனைத்து பண பரிமாற்றங்களையும் இவ்வாறே செய்ய அறிவுறுத்துகிறது.

வெறும் ஐந்து 2000 ரூபாய் தாள்களை ஸ்டைலாக நீட்டி பொருட்கள் வாங்குவதற்கும் 100 நூறு ரூபாய் தாள்கை கெட்டியாக பிடித்துக்கொண்டு கொடுப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது.

இப்படியாக அதிக அளவில் தேவையற்ற பொருட்களை வாங்கும்படியான மிகை நுகர்வு கலாச்சாரத்தை அரசு ஊக்குவிக்குமேயானால் பெரும் பொருளாதார சீரளி ஏற்படும் அபாயமும் ஒளிந்திருக்கிறது என்றே வல்லுனர்கள் கருதுகின்றனர்.

இன்னும் அடுத்தடுத்த மாதங்களில் இது தொடருமேயானால் 80 லட்சம் ரூபாய் 1 கோடி ரூபாய் கார்கள் சாலைகளில் அனாயசமாக ஓடுவதை காண முடியும். மக்கள் அதிக அளவில் ஆடம்பர பொருட்களை வாங்கி குவிப்பார்கள். இப்படி ஆடம்பரப்பொருட்களின் விற்பனை மேலோங்கும்போது சத்தமே இல்லாமல் அடிப்படை பொருட்களின் விலை தாறுமாறாக ஏறிவிடக்கூடும். அப்போது எவ்வளவு வேகமாக பொருட்களை வாங்கி குவித்தார்களோ அதைவிட அதிக கஸ்டங்களை சாமானிய மக்களின் தலையில் தூக்கி வைப்பார்கள்.


இப்படி இதுவும் ஒரு காரணமாக ஆகிவிடக்கூடாது என்பதைஉன்கூட்டியே உணர்ந்து அரசு செயல்பட்டால் அதை கை தட்டி வரவேற்போம்.

பாரத பிரதமர் மோடி பெரும் துணிச்சல்காரர் என்பதை நிறுபித்துவிட்டார். புத்திசாளி என்பதையும் விரைவில் நிறுபிப்பார் என்ற ஆவலுடன் சானியன்.

0 மக்களை ஏமாற்றுகிறதா மோடி விளம்பரம்?

திடீரென்று நல்லிரவில் 500, 1000 ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது என இந்திய பிரதமர் மோடி அவர்கள் அறிவித்திருக்கிறார். இதனால் பெருமளவில் பீதியடைந்து மக்கள் ஏ.டி.எம் மையங்களில் குவிகின்றனர். என்பதிலிந்தே புரிந்துகொள்ள முடிகிறது.

ஆப் கா மோடிஜீ டூயிங் குட் டிராமா...

யோசிக்கத் தெரியாத சாதாரண மக்களிடம் தங்கள் வலிமையை காட்டிகொள்ளும் வகையில்  வெகு அற்புதமான ஸ்டண்ட் ஆக்டிங் மட்டுமே இந்த வரலாற்று நிகழ்வு..

உண்மையில் கருப்பு பணத்தையும், பினாமி கலாச்சாரத்தையும் இது பெரிய அளவில் பாதிக்கப்போவதில்லை.

டாலராகவும், கோல்டாகவும், லேண்டாகவும் பதுக்கிய கருப்பு பணத்தை மீட்கமுடியாது என்பதை நன்கு தெரிந்தும், மக்களிடம் போலி ஸ்டண்ட் விளம்பரத்தை மோடி அரசாங்கம் வெற்றிகரமாக நிறைவேற்றியிருக்கிறது.

போலி கள்ளநோட்டுகளை ஒழிக்க சிறிதளவு பயன்படும் என்று கூப்பாடு போடும் சொம்புகளே  அடிதட்டு மக்களின் வயிற்றில் அடித்தா இப்படி உங்கள் கேவலமான விளம்பரத்தை தேட வேண்டும்??

போதிய அவகாசமும், அறிவிப்பும் கொடுத்து முறையாக அறிவித்தாலும் கூட கள்ளநோட்டுகளை தடுக்கலாமே??!

ஏன் இப்படி சாதாரண குடிமக்களை மதிக்காமல் உங்கள் சர்வதிகாரத்தை காட்டுகிறீர்கள்??

விவரம் தெரிந்தவர்கள் எளிதாக புரிந்துகொள்வார்கள் இது மக்களுக்கு பயன்படாத ஒரு சுய விளம்பரயுக்தி மட்டுமே...

மங்காத்தா கிளைமேக்சில் பெயரளவிற்கு கொஞ்சூண்டு பணத்தை எரிச்சுட்டு மீதிய ஆட்டய போடுவாங்களே...?  அதுபோலவே கருப்பு பணத்தை மீட்பதில் தோல்வி கண்ட மோடி அரசு தங்களின் மேல் மாயையை உண்டாக்கவே இவ்வாறான சர்வதிகாரபோக்கை காட்டியிருக்கிறது.

உண்மையில் மக்கள் நலன் பற்றி விரும்பியிருந்தால் பீதியடையாத வண்ணம், போதுமான முன் அறிவிப்பை வழங்கி அதிகளவில் பணமாற்று மையங்களை தற்காளிகமாகவேனும் ஏற்படுத்தி நீண்ட வரிசையில் அவதிக்குள்ளாகாமல், மக்களின் அன்றாட வாழ்வு பாதிக்காமல் இந்த திட்டத்தை செயல்படுத்தியிருக்க வேண்டும்.

தொற்று எங்கேயோ அங்கே தான் கத்தி வைக்கனும் தல..

உண்மையில் கருப்பு பணம் யாரிடம் இருக்கும்? ரியல் எஸ்டேட், அரசியல், கார்ப்பரேட், பண முதலைகள் தங்களின் கருப்பு பணத்தை 1000, 500 ரூபாய் நோட்டுகளாக கிணற்றிலும், சுவற்றிலும், மொட்டை மாடியிலும் தேமே என்று ஒளித்து வைத்திருப்பார்கள் என்று நம்புகிறீர்களா??

ஒன்றை புரிந்துகொள்ளுங்கள் தோழர்களே!!! இந்த பண மாற்று விவகாரம்  வெற்றியா தோல்வியா என்பதை வரும் எதிகாலம் மட்டுமே தெரிவிக்கும். தேமே என்றிருப்பதற்கு பதில் ஏதேனும் செய்துவிடுவது நல்லது தான். ஆனால், அவ்வாறு செய்யும் நடவடிக்கைகள் சாமானிய நடுத்தரவர்க்கத்தை கொஞ்சமும் மதிக்காதவாறு செய்துகொண்டு அதிலும் தங்களின் மட்டமான அரசியல் விளம்பரத்தை தேடும் அரசின் போக்கானது, நாளைய நாட்களில் "தங்களின் காவிமயமான சர்வதிகார  இந்தியாவை உருவாக்குவதற்கான சோதனை முன்னோட்டங்களோ? என்ற பயம்" சாமானிய மக்களிடம் உருவாக்குறது என்பதை மறுப்பதற்கு இல்லை.




ஆறேழு வருடங்களுக்கு முன்னால் சாதரணமாக 800 ரூபாய்க்கு ஒரு அயர்ன்பாக்ஸ் வாங்குறதுனா கூட கடைக்காரன் கடன் தரமாட்டான். ஆனால் இன்னைக்கு 45000 ரூபாய்க்கு ஒரு மரகட்டிலை ஐந்து நிமிடத்தில் சிபில் ஸ்கோர் செக் பன்னி லோன் சேங்சன் பன்னிகொடுத்துடறாங்க... இதில் உண்மையில் என்ன நடக்கிறது???

தேவையை மீறி கடனில் முழ்கும் மிகைநுகர்வு கலாச்சார நிலமையை இது உண்டாக்கும். 1.50 வட்டி என்பது பேங்கிற்கு பெரும் பலனை உண்டாக்குகிறது. ரிலைன்ஸ் போன்ற கார்ப்ரேட்கள் வெகு வேகமாக பைனான்ஸ் நிறுவனங்களை நிறுவி வருகிறது என்பதை காணமுடிகிறதல்லவா??

மாதம் தவறாமல் டியூ கட்டியே ஆகவேண்டும். இதனால் தங்களின் பணம் பெருக்கப்படுகிறது என்பதாலேயே வங்கிகள், தனியார் நிறுவனங்கள் கூவி கூவி லோன் கொடுத்துக்கொண்டிதுக்கின்றன. இதில் அதிகமாக சிக்கி சீரழிபவர்கள் நடுத்தரவர்க்கமே..!

ஆக, பேங்கிங் மின்னனு பறிமாற்றங்களில் என ஆயிரம் ரூபாய் டெபாசிட் பன்னவோ, எடுக்கவோ முயன்றாலும் 20 ரூபாயாவது சர்வீஸ் சார்ச் கொடுத்து ஏமாற்றப்பட்டு சீரளிந்துகொண்டிருக்கிறோம். இதில் பெரும் பணமுதலைகளுக்கு லாபத்தை தவிர பாதகம் எதுவுமில்லை. ஆனால் நமக்கு???

இன்னும் 8 வருடங்களில் பெரும் பொருளாதார சீர்கேட்டை நாம் சந்திக்க இருக்கிறோமோ என்ற பயம் சூழ்கிறது. மக்களும் அதிகாரிகளும் யோசித்து செயல்படுவது நல்லது.
"பாராளுமன்றத்தில் அதிக முறை பேசாததேன்?'
வாக்களித்த பஞ்சாப் மக்கள் தங்களது ஆம் ஆத்மி எம்பி பகத்சிங் மான்யிடம் கேள்வி.

கேள்விகள் குலுக்கல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு குலுக்கலில் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு மட்டுமே வாய்ப்பளிக்கப்படுகிறது என கூறி பாராளுமன்றத்தில் குலுக்கல் எவ்வாறு நடைபெறுகிறது என்பதை தனது மொபைல் போனில் படமெடுத்து தொகுதி மக்களுக்கு முக நூல் மூலம் வீடியோ வெளியிட்டார்....
இதை தொடர்ந்து சபை உரிமை மீறல் என பிரச்சனையை எழுப்பி பாராளுமன்றத்தினை முடக்கினார்கள் பிஜேபி கட்சியினரும்...காங்கிரஸ் கட்சியினரும்...
பிரச்சனையை வளர்க்காமல் மன்னிப்பு கோரியுள்ளார் அந்த ஆம் ஆத்மி எம்பி பகவத்சிங் மான் அவர்கள்.....ஆனால் மன்னிப்பு கோரினால் மட்டும் போதாது என்றும்..அவர் சிறையிலடைக்கப்பட வேண்டும் என்றும் கோரிவருகிறார்கள்...
மக்கள் மன்றங்களில் அமர்ந்துகொண்டு மொபைலில் ஆபாச படங்கள் பார்த்த பிரதிநிதிகளை பார்த்திருக்கிறோம்....
பாராளுமன்றத்தில் சுகமாக தூங்கும் தலைவர்களை பார்த்திருக்கிறோம்...அவர்கள் மீதெல்லாம் இதுபோன்ற உரிமை மீறல்கள் வந்ததில்லை...ஒரு வேளை ,தூங்குவது... மொபைலில் ஆபாச படங்கள் பார்ப்பது போன்றவை உரிமைகளாக இருக்குமோ?

0 இந்தியா முழுவதும் பின்பற்றலாம் அருமையான ஆம் ஆத்மியின் பட்ஜெட்

தில்லியில் புதிய வரிகளில் அல்லாத, மதிப்புக் கூடுதல் வரி விதிப்பை முறைப்படுத்தி ரூ. 46 ஆயிரம் கோடிக்கான பட்ஜெட்டை ஆளும் ஆம் ஆத்மி அரசு தாக்கல் செய்தது. இதில் கல்வித் துறைக்கும், சுகாதாரத் துறைக்கும் முக்கியத்துவம் அளித்து அதிகப்படியான நிதியை தில்லி அரசு ஒதுக்கி உள்ளது.

தில்லி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-ஆவது நாள் அலுவல் திங்கள்கிழமை பிற்பகல் 2 மணிக்கு தொடங்கியது. இதில் 2016-17 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை துணை முதல்வரும், நிதியமைச்சருமான மணீஷ் சிசோடியா தாக்கல் செய்து பேசியதாவது:

நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதியை செய்யவும், தில்லி அரசின் திட்டங்கள் சாதாரண மக்களையும் சென்றடையும் வகையிலும் மாவட்ட நிர்வாகங்களை "இ-டிஸ்ரிக்ட்' என்ற பெயரில் கணினிமயமாக்கியுள்ளோம்.

வைஃபை வசதி: உள்கட்டமைப்பின் முக்கிய அம்சமான "வைஃபை நெட்வொர்க்' (கம்பியில்லா இணைய வசதி) திட்டத்தை முழு வீச்சில் செயல்படுத்தும் சாத்தியக்கூறுகளை ஆரராய்ந்து வருகிறோம். பட்ஜெட் உருவாக்கத்தில் பொது மக்கள் பங்கேற்க வகை செய்யும் "ஸ்வராஜ் நிதித் திட்டம்' கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. இத்திட்டம் 11 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டம் அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் நீட்டிக்கப்படுகிறது. இதன்படி ஒவ்வொரு மொஹல்லா சபாவுக்கும் நிதி வழங்கப்படும். "சிட்டிசன் லோக்கல் ஏரியா டெவலப்மன்ட்' திட்டத்துக்காக பட்ஜெட்டில் ரூ. 350 கோடி ஒதுக்கப்படுகிறது.

கல்வித் துறைக்கு ரூ.10,690 கோடி: தில்லி அரசு பள்ளிகளின் கல்வித்தரத்தை மேம்படுத்த முதல் கட்டமாக பள்ளிகளுக்குத் தேவையான உள்கட்டமைப்பு; இரண்டாம் கட்டமாக திறமையான ஆசிரியர்களை நியமிப்பது; மூன்றாம் கட்டமாக பாடத்திட்டத்தை மேம்படுத்துவது என்ற வகையில் கல்வித்துறையை மேம்படுத்தி வருகிறோம்.

தற்போது, 8 ஆயிரம் வகுப்பறைகள் கட்டப்பட்டு வருகின்றன. பள்ளி ஆசிரியர்களுக்கு தரமான பல்கலைக்கழங்கள் மூலம் பயிற்சி வழங்க ரூ.102 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

தில்லியில் விளையாட்டுப் பள்ளி, விளையாட்டுப் பல்கலைக்கழகத்தை ரூ. 48 கோடி செலவில் தொடங்குவது பற்றி ஆராய்ந்து வருகிறோம். பள்ளிகள் மாணவர்களுக்கு திறன் கல்வியை வழங்க ரூ. 152 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆக மொத்தம் கல்வித்துறைக்கு வரும் நிதியாண்டு பட்ஜெட்டில் ரூ. 10,690 கோடி ஒதுக்கப்படுகிறது.

சுகாதாரத்திற்கு ரூ.5,259 கோடி: தரமான சுகாதார சேவை ஏழை மக்களின் குடியிருப்பு வரை சென்றடைவதை உறுதி செய்ய இந்த ஆண்டு இறுதிக்குள் 1000 மொஹல்லா கிளினிக்குகள் தொடங்கப்படும். 150 பாலி கிளினிக்குளும் தொடங்க உத்தேசித்துள்ளோம். சில மருத்துவமனைகள் "சூப்பர் ஸ்பெஷாலிட்டி' மருத்துவமனைகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. பட்ஜெட்டில் சுகாதாரத்துறைக்கு ரூ. 5,259 கோடி ஒதுக்கப்படுகிறது.

போக்குவரத்து: தாழ்தள சொகுசு ரக 1000 புதிய பேருந்துகள், "கிளஸ்டர்' திட்டத்தின் கீழ் ஆயிரம் பேருந்துகள் வாங்க திட்டமிட்டுள்ளோம். துவாரகாவில் சுமார் 1,397 பேருந்துகள் நிற்கும் வகையில் புதிய ஐஎஸ்பிடி பேருந்து நிலையத்தை தனியார் - அரசு கூட்டுத் திட்டத்தின் கீழ் உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம்.

இ-ரிக்ஷாக்களுக்கு வழங்கப்படும் மானியம் ரூ. 15 ஆயிரத்திலிருந்து ரூ. 30 ஆயிரமாக உயர்த்தப்படும். பேட்டரி மூலம் இயங்கும் வாகனங்களின் விற்பனையை ஊக்கவிக்க அந்த வாகனங்களுக்கான பதிவுக் கட்டணம் ரத்து செய்யப்படும். பொதுப் போக்குவரத்துக்காக பட்ஜெட்டில் ரூ. 1,735 கோடி ஒதுக்கப்படுகிறது.

சாலைத் திட்டங்கள்: ஜவாஹர்லால் நேரு விளையாட்டு அரங்கம் தொடங்கி ஐஎன்ஏ வரையில் ரூ. 1,261 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் பாரபுல்லா 2-ஆவது கட்ட மேம்பாலச் சாலைத் திட்டம் இந்த ஆண்டுக்குள் செயல்படத் தொடங்கும்.

ஆனந்த் விஹார் முதல் பீராகரி வரையிலான 29 கி. மீட்டர் தொலைவுடைய கிழக்கு மேற்கு காரிடர் திட்டம், வாஜிராபாத் முதல் ஏர்போர்ட் வரையிலான 25 கி.மீ. தூரமுள்ள வடக்கு-தெற்கு சாலை இணைப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்படும். பொதுப் போக்குவரத்தை மேம்படுத்தவும், சைக்கிள் ஓட்டுவதை ஊக்குவிக்கவும், பாதசாரிகள், மாற்றுத்திறனாளிகளுக்கு உகந்த சாலைகளை உருவாக்க 11 சாலைகள் மறுநிர்மாணம் செய்யப்படும். சாலை திட்டங்களுக்காக பட்ஜெட்டில் ரூ. 2,208 கோடி ஒதுக்கப்படுகிறது.

சமூகப் பாதுகாப்பு: கீதா காலனி, ஜனக்புரி, சரிதா விஹார், வசந்த் குன்ஜ் ஆகிய பகுதிகளில் முதியோர் இல்லங்களுக்காகவும், மனவளர்ச்சிக் குன்றியோர் தங்குவதற்கு உஸ்மான்பூர், தல்லுபுரா பகுதிகளில் இல்லம் கட்டுவதற்கும் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. தில்லியில் 42 ஆயிரம் இருள் சூழ்ந்த பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. அந்த பகுதிகளில் போதுமான தெரு விளக்கு வசதி ஏற்படுத்தப்படும். சமூகப் பாதுகாப்பு, சமூக நலத்துறைத் திட்டங்களுக்காக பட்ஜெட்டில் ரூ. 1,381 கோடி ஒதுக்கப்படுகிறது.

குடிநீர் விநியோகம்: 2017-ஆம் ஆண்டு டிசம்பருக்குள் அனைத்து குடியிருப்புகளுக்கும் குடிநீர் விநியோகம் அளிக்கப்படும். வரும் நிதியாண்டில் 300 அங்கீகாரமற்ற காலனிகளுக்கு குடிநீர் விநியோகிக்கப்படும். குடிநீர் விநியோகத் திட்டங்களுக்கு பட்ஜெட்டில் ரூ. 1,976 கோடி ஒதுக்கப்படுகிறது.

கலை, கலாசாரம்: தில்லியில் கலை, கலாசாரம், மொழி மேம்பாட்டுக்கு பட்ஜெட்டில் ரூ. 54 கோடி ஒதுக்கப்படுகிறது. சுற்றுலாத்துறை மேம்பாட்டுத் திட்டங்களுக்கு ரூ. 10 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கப்படுகிறது.

ஆம் ஆத்மி உணவகங்கள்: தில்லிவாழ் ஏழை தொழிலாளர்கள், ரிக்ஷா ஓட்டுநர்கள் ஆகியோருக்கு குறைந்த விலையில் ஆரோக்கியமான உணவு கிடைத்திடும் வகையில் "ஆம் ஆத்மி உணவகங்கள்' விரைவில் தொடங்கப்படும். இதற்காக வரும் நிதியாண்டில் ரூ. 10 கோடி ஒதுக்கப்படுகிறது என்றார் மணீஷ் சிசோடியா.

மேற்கண்ட பட்ஜெட்டில் கல்வி, சுகாதாரம், பொது போக்குவரத்து ஆகிய துறைகளுக்கு தில்லி அரசு மிகவும் முக்கியத்துவம் கொடுத்துள்ளது. இதன்படி திட்டமிட்ட செலவினமாக ரூ. 20,600 கோடியும் திட்டமிடப்படாத செலவினங்களுக்காக ரூ. 26,000 கோடியையும் தில்லி அரசு ஒதுக்கியுள்ளது.

முக்கிய அம்சங்கள்

* கல்வித் துறைக்கு ரூ.10,690 கோடி.

* சுகாதாரத் துறைக்கு ரூ.5,259 கோடி.

* போக்குவரத்துத் துறைக்கு ரூ.1,735 கோடி.

* மூன்று மாநகராட்சிகளுக்கும் ரூ.6,919 கோடி நிதி.

* பெண்கள் பாதுகாப்புக்கு ரூ.1,068 கோடி.

* சமூக பாதுகாப்பு மற்றும் நலத் திட்டங்களுக்கு ரூ.1,381 கோடி.

* ஆம் ஆத்மி உணவகங்கள் அமைக்க ரூ.10 கோடி.

* அரசு பள்ளி வகுப்பறைகளில் சிசிடிவி பொருத்தும் திட்டத்துக்கு ரூ.100 கோடி.

0 தன்னாட்சி (20) மக்களின் கடமைகள்

தன்னாட்சி என்பது சட்டங்கள் இயற்றுவதிலும், திட்டங்கள் போடுவதிலும், அவற்றுக்கான நிதியிலும், இயற்கை வளங்கள் மீதும் மக்களுக்கு நேரடிக் கட்டுப்பாடு இருக்கும் என்பதே. அர்விந்த் கெஜ்ரிவால்.

kejriwal_rally_240314.jpg (666×338)

கிராமங்களுக்கு மட்டுமல்ல நகரங்களுக்கும் தன்னாட்சி வந்தால் அவைகளும் சிறப்பாக இயங்கும் என்கிறார் நம் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் கிராம சபைகள் நம் அரசியல் அமைப்பில் அங்கீகரிக்கப்பட்டது போல நகரங்களுக்கு எந்தவொரு சபையும் இல்லை. தில்லியில் மொஹல்லா சபாக்கள் என்று அழைக்கப்படும் சமுதாய கூட்டங்கள் நடைபெறுகின்றன. இவை சட்டத்தால் இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை. ஆனாலும் மக்கள் பலவிடங்களில் மிகுந்த முனைப்புடன் இந்தக் கூட்டங்களை நடத்துகிறார்கள்.  மக்கள் உள்ளூர் பிரச்னைகளையும் தேவைகளையும் பற்றிப் பேசி தாங்களாகவே முடிவெடுக்கிறார்கள். இந்த சபாக்களின் தலைவர்களும் அதிகாரிகளும் அவற்றைச் செயல்படுத்துகிறார்கள். இத்தகைய வியக்கத்தக்க மாற்றங்கள் தில்லி மாநகராட்சியின் திரிலோக்புரியிலும் சுந்தர் நகரியிலும் நடைபெற்று வருகிறது.
இது எப்படி சாத்தியமாயிற்று என்று பார்ப்போம்:
ஒவ்வொரு வார்டும் பத்து சமூகக் குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, இவை ஒவ்வொரு மாதமும் ஒரு முறையோ அல்லது இரு மாதங்களுக்கு ஒரு முறையோ பொதுக்கூட்டங்கள் நடைபெறும்.
முதியோர் உதவித்தொகை, ஊனமற்றோர் உதவித்தொகை, விதவைகள் உதவித்தொகை போன்ற திட்டங்களில் யாருக்கெல்லாம் உதவ வேண்டும் என்கிற பட்டியலை சமூக அமைப்பே விவாதித்து வெளிப்படையாக தயாரிக்கிறது. செய்ய வேண்டிய வேலை அதிகமாகவும் நிதி குறைவாகவும் இருந்தால் முக்கியத்துவ வரிசையில் வேலைகள் பட்டியலிடப்பட்டு நிதி ஒதுக்கப்படுகின்றது.
சமுதாயக் குழுக்களின் பொறுப்புகள்
எல்லோருக்கும் இருக்க இடம், உடுத்தத்துணி, சாப்பிட உணவு இருக்கும்படி பார்த்துக் கொள்வது இந்தக் குழுக்களின் முக்கியப் பொறுப்பு.
சமுதாயக் குழுக்களின் அங்கீகாரத்தோடு வார்டு குழுக்கள் தங்கள் வேலைகளை செய்யும்.
சேரிப்பகுதி அல்லது ஆதரவற்றவர்கள் கூட்டமாக வசிக்கும் பகுதிகளிலிருந்து மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்ற இந்த சமூகக் குழுக்கள் அல்லது வார்டு குழுக்கள் அனுமதிக்காது.
அரசாங்கத்தின் மறுவாழ்வுத் திட்டங்கள் மூலம் அவர்களுக்குப் போதிய, திருப்திகரமான வசிப்பிடங்கள் தரப்பட்டுவிட்டன என்று உறுதிப்படுத்தினால் மட்டுமே அந்த இடங்கள் காலி செய்து தரப்படும்.
முக்கிய நகரங்களைச் சுற்றி இருக்கும் கிராம மக்களுக்கு அவர்களது நிலங்கள் மீது முழுக்கட்டுப்பாடு இருக்க வேண்டும்.
தங்கள் பகுதியில் வசிப்பவர்களின் மூன்றில் இரண்டு பங்கு மக்களின் ஒப்புதலுடன் ஒரு பிரச்னையை முன் வைத்தால் நகராட்சி அல்லது மாநகராட்சி அதைக் கவனித்து திருப்திகரமாக தீர்த்து வைக்க வேண்டும்.

மக்களின் பொறுப்பு:
தன்னாட்சி என்பது மக்களுக்கு அதிகாரம் வழங்குதல் என்று பார்த்தோம். ‘மக்களுக்கு அதிகாரம் வழங்குவதால் ஒரு பயனும் இல்லை. அவர்களுக்குள் ஒற்றுமை இல்லை; சாதி, மத, இன அடிப்படையில் சண்டை தான் போட்டுக் கொள்ளுவார்கள். ஒற்றுமை இல்லாதவர்களிடம் எப்படி அதிகாரத்தைக் கொடுப்பது?’ என்று அரசாங்கம் கேட்கும். ஆங்கிலேயர்களும் நம்மைப் இப்படிச் சொல்லிச்சொல்லியே பிரித்து ஆண்டு வந்தார்கள். எந்த அரசு வந்தாலும் சமூகப் பிரிவினைகளை ஊதி விட்டு அதில் குளிர் காயவே விரும்புகிறது.
இங்கு மக்களாகிய நாம் என்ன செய்ய வேண்டும் என்று நம் தலைவர் திரு அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகிறார்:
‘எங்களுக்குள் இருக்கும் வேறுபாடுகளை நாங்கள் களைந்து கொள்ளுகிறோம். எங்கள் கையில் அதிகாரத்தைக் கொடுங்கள். 1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி எங்களை ஆளுங்கள் என்று நாங்கள் உங்களுக்குக் கொடுத்த அதிகாரத்தை நீங்கள் துஷ்பிரயோகம் செய்து கொண்டிருக்கிறீர்கள். அதை முதலில் எங்களுக்குத் திருப்பித் தாருங்கள்’ என்று கூறவேண்டும்.

இந்தக் குற்றச்சாட்டுகளிலிருந்து நாம் விடுபட வேண்டுமானால் நமக்குள் ஒற்றுமை வேண்டும். கிராம சபை, நகர சபைகள் கூடும்போது ஒருவர் மற்றவரின் நலம் விசாரிப்பதுடன் ஆரம்பிக்க வேண்டும். ஒரு கிராமத்தில் இருப்பவர்கள் ஒரு குடும்பம் போல வாழவேண்டும். ஒரு வீட்டில் ஒருவருக்கு உடல்நலம் சரியில்லை என்றால் மற்றவர்கள் ஓடிப்போய் உதவவேண்டும். வீட்டுக் கஷ்டங்களை பகிர்ந்துகொள்ளும் அளவிற்கு மக்களுக்குள் ஒரு சுமூக உறவு ஏற்பட வேண்டும். கிராம சபையில் பிறகு கிராம விஷயங்களும், நாட்டு விஷயங்களும் விவாதிக்கப்பட வேண்டும். மனம் விட்டுப் பிரச்னைகளை விவாதிக்கப்பட வேண்டும். இப்படிச் செய்வது எல்லா மக்களையும் இணைக்கும். சொந்தப் பிரச்னைகளிலிருந்து நாட்டுப் பிரச்னைகளை வரை பேசும்போது ஒருவருக்கொருவர் நெருக்கம் ஏற்படும்.

சொந்த விஷயங்கள் பேசப்படும் போதே பேச்சு தானாகவே கிராம விஷயங்கள், நாட்டு விஷயங்கள் என்று மாறும். நாடு வேறு நாம் வேறு அல்ல என்ற மனநிலையை இது உண்டாக்கும். கிராமசபை கூடும்போது தவறாமல் கலந்து கொள்ளுங்கள். முதலில் வருபவர் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் பிரச்னைகள் தீர்கின்றன என்ற செய்தி பரவப் பரவ நிறையபேர்கள் வர ஆரம்பிப்பார்கள். தொடர்ந்து இக்கூட்டங்கள் நடைபெறுவது மக்களுக்கு ஊக்கமளிக்கும்.

உங்கள் பகுதியில் மட்டுமின்றி, மற்ற பகுதிகளில் நிகழும் நிகழ்வுகளையும் அறிந்து கொள்ள ஆர்வம் காட்டுங்கள். இதன் மூலம் நீங்கள் நிறைய கற்கலாம். தன்னாட்சி என்பது இப்போதைய நிலையில் நமக்குப் புதிதாக இருக்கலாம். ஆனால் நம் நாட்டிலேயே பல இடங்களில் தன்னாட்சி நடந்து வருகிறது. போகப்போக இதுவே நம் நாட்டின் எல்லாப்பகுதிகளுக்கும் பரவி நாடு முழுவதும் இதனால் பயன்பெறப்போகும் நாள் வெகு தொலைவில் இல்லை.
எத்தனை நாட்கள் நம் நாட்டில் இது சரியில்லை; அது சரியில்லை என்று சொல்லிக்கொண்டிருப்போம்? வாருங்கள் எல்லோரும் இணைந்து செயல் படுவோம். தன்னாட்சி மூலம் தன்னிறைவு பெறுவோம்.

இந்தக் கட்டுரைகளை எழுத பயன்படுத்தப்பட்ட புத்தகம்: திரு அர்விந்த் கெஜ்ரிவால் எழுதிய ‘ஸ்வராஜ்’. தமிழாக்கம் திரு. கே. ஜி. ஜவர்லால்.


0 தன்னாட்சி 19 - சுயமாகச் செயல்படும் கிராம சபை

மாநில அரசின் தலையீட்டினை தவிர்க்க பஞ்சாயத்துக்கள் சுயமாகச் செயல்படும் அமைப்பாக இருக்க வேண்டும் – அர்விந்த் கெஜ்ரிவால்
பஞ்சாயத்துக்களில் மாற்றம் ஏற்படுத்துவது பற்றி இன்னும் சொல்லுகிறார் திரு அரவிந்த் கெஜ்ரிவால்

கோட்ட மற்றும் மாவட்டப் பஞ்சாயத்துகள்:

தற்போதைய நிலை:
கிராம பஞ்சாயத்துகள் தனித்து இயங்குவதில்லை. கோட்ட அல்லது மாவட்டப் பஞ்சாயத்துகளின் கீழ் வருகின்றன. இந்த அமைப்புகள் தான் கிராமப் பஞ்சாயத்தின் வேண்டுகோள்களை அங்கீகரித்து, நிதியும் கொடுக்கின்றன.
யோசனைகள்:
·         கிராமப் பஞ்சாயத்துகள் தனித்து இயங்குபவையாக இருக்க வேண்டும்.
·         நடக்கும் அனைத்து வேலைகளிலும் மக்களின் பங்களிப்பு நேரடியாக இருக்கவேண்டும்.
·         நிர்வாகம், மற்றும் நிதித்துறை இரண்டைப் பொறுத்தவரை கிராமப் பஞ்சாயத்துகள் யாருடைய அங்கீகாரத்திற்காகவும் காத்திருக்க தேவை இருக்கக்கூடாது.
·         எந்த ஒரு புதிய திட்டமும் கிராமப் பஞ்சாயத்தின் அனுமதி இல்லாமல் தொடங்கக்கூடாது. சம்மந்தப்பட்ட கிராம சபை ஒப்புக்கொண்டால் தான் புதிய திட்டம் செயலாக்கப்படலாம்.
·         கிராம சபைக்கும், கோட்டப் பஞ்சாயத்துக்கும் பாலமாக பஞ்சாயத்துத் தலைவர் செயல்பட வேண்டும். கிராம சபைகளின் அனுமதியின்றி கோட்டப் பஞ்சாயத்தில் அவர் எந்த வாக்குறுதியும் கொடுக்கக்கூடாது. அதேபோல கிராம சபையின் ஒப்புதலோடு மட்டுமே முடிவெடுக்க வேண்டும்.
சட்டங்கள் இயற்றுவதில் மக்களின் பங்கு
தற்போதைய நிலை:

நம் ஜனநாயகத்தில் நாம் தேர்ந்தெடுக்கும் பிரதிநிதிகள் நம் கட்டுப்பாட்டில் இல்லை. மக்களின் நேரடிப்பங்கு இல்லாமல் இயற்றப்படும் சட்டங்கள் சில வெளிநாட்டு, உள்நாட்டு நிறுவனங்களுக்கு சாதகமாக இருக்கின்றன. இதை ஒரு முடிவுக்குக் கொண்டுவர சட்டம் இயற்றுவதில் மக்களின் பங்கு மிகவும் அவசியம்.

யோசனைகள்:
·         5% அல்லது அதற்கு அதிகமாக எண்ணிக்கை கொண்ட கிராம சபைகள்  ஒரு சட்டம் தேவை என்று மனு அளித்தால், மாநில அரசு அந்த தகவலை மற்ற கிராம சபைகளுக்கு தெரிவிக்க வேண்டும். 50 சதவிகிதத்திற்கும் அதிகமான கிராம சபைகள் அதற்கு ஒப்புதல் கொடுத்தால் அதை சட்டமாக இயற்ற வேண்டும். புதிய திட்டங்களுக்கும், கொள்கைகளுக்கும் கூட இந்த முறையைப் பின்பற்றலாம். நாட்டின் முன்னேற்றத்திற்கு இது ஒரு புதுப்பாதையை வகுக்கும். காவல்துறை, நீதித்துறை என்று எல்லா துறைகளிலும் மக்களின் நேரடிப் பங்களிப்பிற்கு இந்த முறையை பின்பற்றலாம்
·         எம்.எல்.ஏக்களும், எம்.பி.க்களும் கோட்ட, மாவட்டப் பஞ்சாயத்தின் பிரதிநிதிகள். ஆனால் இவர்களுக்கென்று பொறுப்புகள் ஏதும் தரப்படவில்லை. நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் முன்வைக்கப்படும் மசோதாக்கள், சட்டங்கள், திட்டங்கள் இவற்றின் பிரதிகளை இவர்கள் கோட்டப் பஞ்சாயத்தின் முன் வைக்கவேண்டும் என்று ஒரு சட்டம் கொண்டுவர வேண்டும். கிராம சபைகளில் இவை தொடர்பாக விவாதங்கள் நடைபெற்று, அவற்றின் முடிவுகளை மேற்கண்ட அவைகளுக்கு அனுப்பி வைக்கவேண்டும்.
இன்னும் சில யோசனைகள்:
·         தங்களை நேரடியாக பாதிக்கக்கூடிய முடிவுகளில் தகவல் கேட்டறியும் உரிமை கிராம சபைகளுக்கு கொடுக்கப்பட வேண்டும்.


·         பஞ்சாயத்து செயலரை கிராம சபை நியமிக்க வேண்டும். இதனால் அவர் கிராம சபையின் நேரடி கண்காணிப்பில் வருவார்.
·         கிராம சபையின் ஒப்புதல் இன்றி எந்த அரசாங்க வேலைக்கும் பணம் வழங்கக்கூடாது. இதனால் பஞ்சாயத்தில் ஏற்படும் முறைகேடுகளைக் குறைக்கலாம்.
·         கிராம சபைகளின் அனுமதியின்றி மதுபானக்கடைகளுக்கு உரிமம் கொடுக்கக்கூடாது.
·         தொழிற்சாலை, சுரங்க வேலை எதற்குமே கிராம சபையின் ஒப்புதலுடனேயே உரிமம் வழங்க வேண்டும்.
நிலம் கையகப்படுத்துதல்:

தொழிற்சாலை அமைக்கவும் வேறு உபயோகங்களுக்காகவும் நிலங்கள் மக்களின் ஒப்புதல் இன்று பறிக்கப்படுகின்றன. இதனால் கிராம மக்கள் பலர் வீடிழந்தும், வேலையிழந்தும் திண்டாடுகிறார்கள். அரசு தரும் நஷ்ட ஈடு போதுமானதாக இல்லை. ஒரு விவசாயி தன்னிடம் இருக்கும் ஒரு ஏக்கர் நிலத்தில் தன் மொத்தக் குடும்பத்திற்கும் ஆயுள் முழுவதும் உணவு கொடுக்க முடியும். ஆனால் அந்த நிலத்தை எடுத்துக் கொண்டு அரசு கொடுக்கும் 40,000 ரூபாயில் எத்தனை நாள் வாழ்க்கை நடத்தமுடியும்?
யோசனை:
·         மக்களின் நன்மைகளை மனதில் கொண்டு நிலத்தைத் தருவதா வேண்டாமா என்று கிராம சபை தீர்மானிக்கவேண்டும். கிராம சபைகள் நிபந்தனைகளையும் கிராம சபை விதிக்கலாம்.
·         தொழிற்சாலை தொடங்க விரும்பும் நிறுவனம், மத்திய மாநில அரசுகள் முதலில் பஞ்சாயத்திற்கு நிலம் வேண்டும் என்று விண்ணப்பிக்க வேண்டும்.
·         திட்டம் சம்மந்தப்பட்ட எல்லா விவரங்களையும் கிராம மக்களின் மொழியில் மொழி பெயர்த்து மக்களின் ஆலோசனைக்கு வைக்க வேண்டும். இரண்டு மாத இடைவெளியில் கிராம சபைக் கூட்டம் கூடி சந்தேகங்கள், பயங்கள் முதலியவற்றை சம்மந்தப்பட்ட அதிகாரிகளை வரவழைத்து, நிவர்த்தி செய்து கொள்ளவேண்டும்.
·         நிலத்தை இழப்பவர்களின் மறுவாழ்வுக்கு சரியான தீர்வு ஏற்படுத்த வேண்டும். விவசாய நிலங்கள் விவசாயத்துக்கேன்றே விடப்பட வேண்டும்.
·         நில ஆவணங்கள் கிராம சபையின் மேற்பார்வையில் பஞ்சாயத்துக்களே வைத்துக்கொள்ளவேண்டும். ஒவ்வொரு மாதமும் விற்பனையான நிலங்களின் ஆவணங்கள் கிராம சபையின் பார்வைக்கு வரவேண்டும்.
·         கிராமப் பகுதிகளில் இருக்கும் சிறிய நீர்நிலைகள், கனிம வளங்கள், வன உற்பத்திப்பொருட்கள் ஆகியவற்றிற்கு கிராம சபைகள் உரிமையாளர்கள் ஆக்கப்பட வேண்டும். நம் நாட்டின் கருவூலங்கள் இயற்கை வளங்கள். அவற்றை பயன்படுத்தும்போது மிகுந்த அக்கறை எடுத்துக் கொள்ளவேண்டும்.
·         சாதி, வருமானம், வசிப்பிடம் போன்றவற்றிற்கான சான்றிதழ்கள் வழங்கும் அதிகாரம் பஞ்சாயத்துகளிடம் இருக்க வேண்டும்.
·         வரிவசூல் செய்வதன் அனுகூலங்கள் மக்களுக்கு நன்கு புரிந்திருப்பதால் வரி வசூலில் மக்களின் நேரடிப் பங்களிப்பு இருக்கவேண்டும். மக்களின் முன்னேற்றத்திற்காக வரி வசூல் செய்யப்படுவதால் கிராம சபைகளுக்கு இந்தப் பொறுப்பு வழங்கப்படவேண்டும்.
·         ஒவ்வொரு கிராமமும் தனிப் பஞ்சாயத்தாக உருவாக வேண்டும்.
·         பஞ்சாயத்து ஆவணங்கள் எல்லா மக்களின் பார்வைக்கும் கிடைக்கும்படி வெளிப்படையாக இருக்கவேண்டும்.
·         பஞ்சாயத்து ராஜ் அமைப்பில் விதிமீறல்களை சரி செய்ய லோக்பால் அமைக்கப்படவேண்டும்.
·         மாநில அரசின் தலையீட்டினை தவிர்க்க பஞ்சாயத்துக்கள் சுயமாகச் செயல்படும் அமைப்பாக இருக்க வேண்டும்.
பயனாளிக் குழுக்கள்:
கிராம சபை எடுக்கும் ஒரு முடிவு அந்தக் கிராமத்தின் ஒரு சாராரை பாதிக்கிறது என்றால் அதைத் தீர்த்துவைக்க இந்தப் பயனாளிக் குழுக்கள் பயன்படும்.

கிராம சபைகளை நல்ல முறையில் செயல்பட வைக்க மேற்கூறிய யோசனைகளைக் கூறிய திரு அரவிந்த் கெஜ்ரிவால் நகரங்களுக்கும் தன்னாட்சி அதிகாரம் கொடுக்கப்படவேண்டும் என்று சொல்லி அதைப்பற்றியும் பேசுகிறார்.

அடுத்த பகுதியில் பார்ப்போம்.

0 தன்னாட்சி (18) கிராம சபையில் மாற்றங்கள்

மக்கள் கிராம சபைகள் மூலம் முடிவுகள் எடுக்கும் விதமாக சட்டம் திருத்தப்பட வேண்டும். இதனால், தங்கள் முன்னேற்றத்திற்கு தாங்களே பொறுப்பு என்ற மனப்பான்மை மக்களுக்கு வரும் - அர்விந்த் கெஜ்ரிவால்

போன பதிவுகளில் தன்னாட்சி பற்றி பலவிதமான விஷயங்கள் படித்தோம். நமது அரசியல் அமைப்பு திருத்தப்பட்டால் ஒழிய, நல்ல மனிதர்களால் கூட நம் நாட்டில் முன்னேற்றத்தைக் கொண்டு வர முடியாது என்றும் பார்த்தோம். அரசியல் அமைப்பில் என்னென்ன மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும் என்று நம் தலைவர் திரு அரவிந்த் கெஜ்ரிவால் தனது புத்தகம் ‘தன்னாட்சி’ யில் சொல்லியிருப்பதைப் பார்ப்போம்.

முதலில் மக்கள் கிராம சபைகள் மூலம் முடிவுகள் எடுக்கும் விதமாக சட்டம் திருத்தப்பட வேண்டும். இதனால், தங்கள் முன்னேற்றத்திற்கு தாங்களே பொறுப்பு என்ற மனப்பான்மை மக்களுக்கு வரும். நம் தலைவர் திரு அரவிந்த் கெஜ்ரிவால் பரிந்துரைக்கும் இன்னும் சில மாற்றங்களை பார்போம்.

கிராம சபையின் அதிகார வரம்பு:
தற்போதைய நிலை: பஞ்சாயத்துக்களுக்கு மிகவும் குறைந்த அதிகாரங்கள் இருக்கிறது. அதுவும் பஞ்சாயத்துத் தலைவரின் கட்டுப்பாட்டில் உள்ளது. அவரை யாரும் தட்டிக் கேட்க முடியாது. கிராம சபை அவருக்கு ஆலோசனை சொல்லலாம். அவ்வளவே. அதைக் கேட்பது, விடுவது அவரது விருப்பம். இதனால் பெரும்பாலான பஞ்சாயத்துத் தலைவர்கள் ஊழல்வாதியாக மாறிவிட்டனர். அவர்களது நடவடிக்கைகளைப் பார்த்து ஒன்றும் செய்யமுடியாமல் நமக்கு ஏன் வம்பு என்று மக்கள் ஒதுங்கிவிடுகிறார்கள். மாவட்டக் குற்றவியல் நடுவர் அல்லது மாவட்ட ஆட்சியாளர் இவர்களால் மட்டுமே பஞ்சாயத்துத் தலைவரை கட்டுப்படுத்த முடியும் என்ற நிலை.

திரு அரவிந்த் கெஜ்ரிவால் யின் யோசனை:
·         பஞ்சாயத்துத் தலைவரை நேரிடையாக மக்களின் கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும். முதல் கட்டமாக கிராம சபை எல்லா முடிவுகளையும் எடுக்கும் என்ற நிலையைக் கொண்டுவர வேண்டும். அந்த முடிவுகள் இறுதியானாவை. அவற்றைச் செயல்படுத்தும் பொறுப்பு மட்டுமே பஞ்சாயத்துத் தலைவர்களுக்கு இருக்க வேண்டும்.
·         அவர் தவறாக நடந்து கொண்டால், அவருக்கு எதிராக காவல் துறையை வழக்குப் பதிவு செய்யும் வைக்கும் அதிகாரம்  கிராம சபைகளிடம் இருக்க வேண்டும். விசாரணை எந்த நிலையில் இருக்கிறது என்ற அறிக்கை வாராவாரம் அல்லது மாதந்தோறும் கிராம சபைமுன் வைக்கப்பட வேண்டும்.

·         விசாரணை முடியும் வரை அவர் மீது மாவட்டக் குற்றவியல் நடுவர் அல்லது வேறு அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுக்கக்கூடாது.
·         கிராம சபையின் வழிகாட்டுதல் படி நடக்கவில்லை என்றால் அவரை திரும்ப அழைத்துக் கொள்ளும் அதிகாரம் கிராம சபைக்கு இருக்க வேண்டும். எப்படி அவரைத் திரும்ப அழைத்துக் கொள்வது? முதலில் ஐம்பது சதவிகிதத்திற்கு அதிகமான வாக்காளர்கள் தேர்தல் ஆணையத்திடம் கையெழுத்திட்டு ஒரு மனு கொடுக்க வேண்டும். 15 நாட்களுக்குள் கையெழுத்துக்கள் சரிபார்க்கப்பட்டு ஒரு மாதத்துக்குள் அவர்மீது நடவடிக்கை எடுக்க ரகசிய வாக்கெடுப்பு நடத்தி, நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி பெற்றால், அவர் நீக்கப்படுவார். மறுதேர்தல் நடத்தப்படும்.

·         இந்த அதிகாரம் கிராம சபைகளுக்கு வழங்கப்பட்டால், மக்கள் பஞ்சாயத்துத் தலைவரின் நடவடிக்கைகளைத் தொடர்ந்து  கண்காணிக்க முடியும். மக்கள் நம்மைக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற உண்மை தலைவர்களை தவறு செய்யாமல் காக்கும்.

கிராமத்தின் வேலைகளை பகிர்ந்தளித்தல் 

தற்போதைய நிலை: எந்த வேலை, எந்த வசதிகள் எந்த அமைப்பின் கீழ் வரும் என்பதைப் பற்றிய குழப்பங்கள் இருக்கின்றன.
யோசனை: முதலில் செய்ய வேண்டிய வேலைகள், தேவையான வசதிகள், இவைகளை எந்த அமைப்பின் கட்டுப்பாட்டில் விடுவது என்று தெளிவான ஒரு பட்டியல் தயார் செய்ய வேண்டும். இதன் பிறகு, நிதி ஒதுக்கீடு பற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முடிவு எடுக்க வேண்டும்.


தற்போதைய நிலை:
தங்கள் கிராமத்தில் வேலை செய்யும் அரசு ஊழியர்களின் செயல் திறன் மக்களுக்கு அதிருப்தியை கொடுக்கிறது. கிராம சபைகளின் கீழ் அவர்கள் வராததால் மக்கள் என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிறார்கள்.

யோசனை:
·         எந்த பஞ்சாயத்தின் கீழ் வேலை செய்கிறார்களோ அந்த பஞ்சாயத்தின் ஊழியர்களாக அவர்கள் கருதப்பட வேண்டும். ஒருவர் ஓய்வு பெற்றால் அந்த இடத்திற்கு இன்னொருவரை நியமிக்கும் அதிகாரமும் பஞ்சாயத்துக்கு இருக்க வேண்டும். மாநில அரசின் தலையீடு இதில் இருக்ககூடாது.
·         தேவைப்பட்டால் புது ஊழியர்களை நியமிக்கும் அதிகாரம் பஞ்சாயத்துகளிடம் இருக்க வேண்டும்.
·         அவர்களை தண்டிக்கவும், நீக்கவும், நன்கு வேலை செய்பவர்களை ஊக்குவிக்கவும் கிராம சபைகளுக்கு அதிகாரம் வேண்டும்.
·         நியாய விலைக்கடைகளுக்கு வழங்கப்படும் உரிமத்தை அவர்கள் சரிவர இயங்கவில்லை என்றால் ரத்து செய்யும் அதிகாரம் கிராம சபைக்கு வேண்டும்.

·         தங்கள் பகுதியைச் சேர்ந்த ஊழியருக்கு ஆணையிடும் அதிகாரமும், தேவைப்படும்போது அவர்களை கிராம சபை முன் ஆஜராகும்படி உத்திரவிடவும் கிராம சபைக்கு அதிகாரம் இருக்கவேண்டும். கிராம சபையின் ஆணைகளை அலட்சியப்படுத்தவோ, நிராகரிக்கவோ செய்யும் அதிகாரிக்கு அபராதம் விதிக்கும் அதிகாரமும் கிராம சபைக்கு வேண்டும். அதிகாரிகளது அதிகார வரம்பில் குளறுபடிகள் இருந்தால் அடுத்த உயர்மட்டப் பஞ்சாயத்திடம் தீர்வு கோரவேண்டும்.

அரசாங்க நிதியை கிராம சபையின் கட்டுப்பாட்டில் வைத்தல்:

தற்போதைய நிலை: கிராமத்தின் தேவைகளுக்குச் சற்றும் தொடர்பு இல்லாத திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் இயற்றுகின்றன. இது போன்ற திட்டங்கள் ஊழலுக்கு வழி வகுப்பதுடன், மக்களையும் பிச்சைக்காரர்கள் ஆக்குகின்றன.
யோசனை:
·         தேவையில்லாத திட்டங்கள் யாவும் நிறுத்தப்பட வேண்டும்.  பஞ்சாயத்துக்கு வழங்கப்படும் நிதி எந்தத் திட்டத்துடனும் இணைக்கப் படாததாக இருக்க வேண்டும். அப்படி ஒதுக்கப்பட்ட நிதியை எந்தெந்த திட்டத்திற்கு செலவு செய்ய வேண்டும் என்பதை கிராம மக்கள் தீர்மானிக்கட்டும்.
·         ஒவ்வொரு மாநிலமும் தங்கள் பட்ஜெட்டில் 50% பஞ்சாயத்துக்களுக்கு வழங்க வேண்டும்.
·         மேலதிகாரியிடமிருந்து தங்கள் கிராமத்திற்கான நிதியைப்  பெற பஞ்சாயத்துகள் மிகுந்த சிரமப் பட வேண்டியிருக்கிறது. ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் முதல் தேதி பஞ்சாயத்துக்களுக்கான நிதியை அவர்களது வங்கிக் கணக்கில் போட்டு விடப்பட வேண்டும்.
·         ஒவ்வொரு கிராமத்திலிருந்து தலித்துகளுக்கென நிதியின் ஒரு பகுதி ஒதுக்கப்பட வேண்டும். மேல்சாதியினரால் அவர்கள் கொடுமைக்கு ஆளாகாமல் இருக்க இது உதவும்.

அடுத்த பதிவில் மேலும் பார்ப்போம்.......