0 ஆம் ஆத்மி கட்சி பற்றி...

ஆம் ஆத்மி கட்சி  ஊழலுக்கு எதிராக... 
சாதி, மத, மொழி, இன அடிப்படையிலான மரபுகளை 
உடைத்தெறிந்து துவங்கப்பட்ட உன்னதமான அரசியல் கட்சியாகும்
AK என அன்போடு அழைக்கபடும் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களால்  
26 நவம்பர் 2012ல்   தலைநகர் டெல்லியில் தொடங்கப்பட்டது. 

ஜன் லோக்பால் மசோதாவை கோரி 2011-ஆம் ஆண்டு முதல் இயங்கி வரும் அண்ணா ஹசாரேவின் ஊழலுக்கு எதிரான இந்தியா எனும் இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்தி முழுவீச்சில் பணியாற்றிய அரவிந்த் கெஜ்ரிவால் நல்லதோர் அரசியல் மாற்றம் மட்டும் தீர்வு என்ற சிந்தனையில் ஆம் ஆத்மி கட்சியை அரவிந்த் கெஜ்ரிவால் துவக்கினார்.

ஆம் ஆத்மி கட்சி உருவாகியது முதல்ஊழலுக்கு எதிராகவும்,  மக்கள் நலனுக்காகவும் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டது. டெல்லியில்தண்ணீர் மற்றும் மின்சாரத்தின் விலை ஏற்றத்திற்கு காரணம் அரசு மற்றும் தனியாருக்கு சொந்தமான கழகங்களுக்கும் இடையே உள்ள தொடர்பை வெளிப்படுத்தியது

கற்பழிப்பிற்கு எதிரான கடுமையான சட்டத்தை அறிமுகப்படுத்தக் கோரி
கற்பழிக்கப்பட்டவர்கள் மற்றும் பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குரல் கொடுத்து போராட்டம் நடத்தியது

2013 தில்லி சட்ட பேரவை தேர்தலில் இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுத்தது. 2013 டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி மொத்தமுள்ள 70 இடங்களில் 28 இடங்களில் வெற்றி பெற்றது

 8 இடங்களில் வென்ற காங்கிரசு வெளியில் இருந்து ஆதரிப்பதாக ஆளுநருக்கு கடிதம் மூலம் சொன்னதால் ஆம் ஆத்மி ஆட்சி அமைத்ததுபுது தில்லி தொகுதியில் வென்ற அரவிந்த் கெஜ்ரிவால் டிசம்பர் 28, 2013 அன்று முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார் 

ஆம் ஆத்மி கட்சி தான் பதவி வகித்த 49 நாட்களில்ஊழலுக்கு எதிரான பல பணிகளை செய்து முடித்தது.

டெல்லியில் உள்ள வீடுகளுக்கு மாதம் 700 லிட்டர் இலவச குடிநீர் திட்டம்.

400 யூனிட்டுகளுக்கு குறைவாக மின்சாரம் உபயோகித்தவர்களுக்கு 
மின்கட்டணம் பாதியாக குறைப்பு.

காமன் வெல்த் விளையாட்டு ஊழலுக்கு எதிராக பல வழக்குகளை 
தொடர்ந்ததுஊழலுக்கு எதிரான இலவச அழைப்பு மையத்தை  
ஏற்ப்படுத்தியது.

டெல்லி பல்கலைகழகத்தில் டெல்லி மாணவர்களுக்கு 90% சதவிகித 
இட ஒதுக்கீட்டை ஒதுக்கியது.

எரிவாயு சிலிண்டர் விடயத்தில் ரிலையன்ஸ் நிறுவனம் செய்த ஊழல் 
காரணமாக முகேஷ் அம்பானி, வீரப்ப மொய்லி  மற்றும் முரளி தேரோக்கு 
எதிராக முதல் தகவல் அறிக்கையை தாக்கல் செய்ததுஇருந்தும்

ஊழலுக்கு எதிரான வலுவான சட்டம் என்று கருதப்படும் 
ஜன் லோக்பால் மசோதாவை தாக்கல் செய்யவிடாமல் 
பா..கவும்இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியும் எதிர்த்தால்
ஜன் லோக்பால்  சட்டத்தை நிறைவேற்ற சட்டமன்றத்தில் போதிய ஆதரவு 
இல்லாததால் தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி 
முதல்வர் கெஜ்ரிவாலும் அவரது அமைச்சர்களும் பதவி விலகினர்.


 மீண்டும் 2015ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 
தில்லியின் 67 தொகுதிகளில் மக்களின் பேராதரவோடு வெற்றி பெற்றது. 

உலகின் மாபெரும் ஜனநாயக நாடான இந்தியாவின் தலைநகரில் 
மிக சிறந்த மக்களாட்சியை நடத்திவருகிறது.

திருப்பூர் மாவட்டத்தில் ...  ஆம் ஆத்மி  கட்சி...
2013ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் செயல்படுகிறது..

2013ம் ஆண்டு  டிசம்பரில் நடந்த டெல்லி சட்டபேரவை தேர்தலுக்கு...
திருப்பூரில் இருந்து செயல் வீரர்கள் சென்று பரப்புரை செய்தனர்.

2014ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் வேட்பாளராக
பா.. வால் அறிமுகபடுத்திய மோடியை எதிர்த்து
தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் போட்டியிட்ட..
வாரணாசி தொகுதியிலும் பிரச்சாரம் செய்ய திருப்பூரிலிருந்து சென்றோம்.

 மீண்டும் 2015ம் ஆண்டு பெற்ற சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த
டெல்லி சட்டசபை தேர்தலில் பிரச்சாரத்திற்காக தமிழகம் சார்பாக சென்ற 
பெரும்படையில் திருப்பூர் மாவட்ட நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.