0 2000 ஆயிரம் தாளால் உண்மையில் பொருளாதார வீழ்ச்சி அடையுமா?
நிச்சயம் இந்திய பொருளாதாரத்தில் குறிப்பிட்ட மாற்றம் இருக்கப்போகிறது என்பதில் மாற்றுகருத்து இல்லை. அது வளர்ச்சியா வீழ்ச்சியா என்பதை குறைந்தது மூன்று ஆண்டுகளாவது கழிந்தால் தான் உறுதியாக சொல்ல முடியும். ஆனால், எனது பார்வையில் இரண்டுவிதமான பின்னடைவை சாதாரன நடுத்தரவர்க்கம் சந்திக்க இருக்கிறது என்பது மட்டும் புரிகிறது.
முதலில் சாதகம் என்ன என்றால் 500 கோடியை கூட, இரண்டு சூட்கேசில் தினித்து அசால்டாக டிரான்ஸ்போர்ட் செய்யலாம். மற்றும் ரூபாய் தாள்களின் தயாரிப்பு செலவு குறிப்பிடதக்க வகையில் குறைய வாய்ப்பு இருக்கிறது. இது மட்டும் தான் சாதகமா? விவரம் தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் தெரிவிக்கட்டும்.
சரி பாதகமாக பயமுறுத்தும் காரணங்களை பார்ப்போம்.
1.முதலில் 2000 ரூ நோட்டு பெரும்பாலும் மேல்தட்டு மக்களின் கைகளில் தான் புரளபோகிறது. இனி எலக்சன் டியூட்டிகளிலும், கஸ்டம் டியூட்டிகளலும் அதிகப்படியான பண புழக்கத்தை கட்டுபடுத்த புதிய செக்யூரிட்டி முறைகளை தேடி ஓடும் அதிகாரிகளை நினைத்து பார்க்க வருத்தமாகவும் கொஞ்சம் ஆறுதலாகவும் இருக்கிறது.
அதேபோல் பதுக்கலுக்களுக்காக டாலரையும், கோல்டையும், லேண்டையும் தேட வேண்டியிருக்காதோ என தோன்றுகிறது. 5000, 10000 ரூ தாள்கள் நிறுத்தப்பட்டது ஏன் என்று தெரியாதவர்களுக்கு இதன் பிண்ணனி தெரிய வாய்ப்பில்லை.
2.சிறு வணிக நிறுவனங்கள், ஹோட்டல்கள், பேருந்துகளில் பெரும் சில்லரை தட்டுப்பாடு பிரச்சனை வரும். அதன் நிறுவனர்கள் முன்கூட்டிய நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும். சாதரணமாக நால் ஒன்றுக்கு 10 பேர் 2000 ரூ தாளை நீட்டினாலும் குறைந்தபட்ச இருப்பாக கல்லா பெட்டியில் 20,000ரூ வைத்திருக்க வேண்டும். அது குறு, சிறு, பிளாட்பார, நடமாடும் வாகனங்களில் விற்பனை செய்யும் ஏழை வியாபாரிகளுக்கு எப்படியான பாதிப்பை ஏற்படுத்துமோ என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.
3.மிக முக்கியமான விசயம் என்னவென்றால் 2016 ஆன இன்றைய நாளிலிருந்து "அடுத்த மூன்று வருடங்களில் மக்களின் மிகை நுகர்வு கலாச்சாரம் வெகு வேகமாக பரவும்". ஆன்லைன் சாப்பிங்களும், பெரிய சூப்பர்மார்கெட்களும், கார், மின்னனு, ஜிவல்லரி ஸோரூம்களும் அதிகளவில் தோன்றி மக்களின் உழைப்பை போதும் போதும் என்ற அளவிற்கு சுரண்டி தங்கள் வயிற்றை வளர்க்கும்.
மிகை நுகர்வு கலாச்சாரம் -
அப்படியென்ன அபத்து இதில் இருக்கிறது என்பதை கொஞ்சம் கவனாக புரிந்துகொள்ளுங்கள். பொதுவாக நம் தேவைக்காக ஒரு கிலோ பாசிப்பருப்பு வாங்குவதற்காக நம்ம தெருமுனை அண்ணாச்சிகடைல வாங்கும் போது பெரிய அளவில் மனதில் ஒன்றும் தோன்றாது. ஆனால், அதே ஒரு கிலோ பாசிப்பருப்பை ஒரு பெரிய சூப்பர் மார்க்கெட்டில் வாங்குவதற்காக நாம் செல்வோமேயானால், முதலில் உள்ளே நுழைந்ததும் பெப்சிக்கோ, கோக்கிற்கோ ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்று குவித்து வைத்திருக்கும் பாட்டில்களை பார்த்ததும் உடனே மனசுக்குள் இருக்கும் அவசர புத்தி நம்மை அந்த பாட்டிலை வாங்க வைத்துவிடும். அதுபோலவே பருப்பை தேடும் நேரத்தில் குறைந்தது மூன்று இதர பொருட்களையிம் வாங்கி நம் பேஸ்கட்டில் போட்டு விடுவோம். வெறும் கைகளால் பொருட்களை எடுக்கும் போது நாம் அதிக எண்ணிக்கையில் எடுக்க மாட்டோம். ஆனால், ஒரு பேஸ்கட் கையில் இருந்தால் பார்ப்பதையெல்லாம் எடுத்து அதில் போட்டுக்கொண்டு பில் கவுண்டருக்கு செல்வோம் என்ற யுக்தியையே பெரும் நிறுவனங்கள் வெகு காலமாக கையாண்டு வருகிறது.
ஆக, ஒரு கிலோ பருப்பு வாங்க சென்ற நாம் கூடவே நன்கு பொருட்களையும் சேர்த்து பில் அழுது வாங்கி வருகிறோம். இதில் கொடுமை என்னவென்றால் நான்கில் மூன்று பொருட்களை நாம் போதுமான அளவு பயன்படுத்தாமல் வீனாய் இடத்தை அடைத்து வைக்க போகிறோம்.
இதே யுக்தியை தான் ஆன்லைனில் பெண்டிரைவ் வாங்க சொடுக்கினால் 5400 ரூக்கு கூடுதலாக டச் மொபைல் போனையும் ஆர்டர் செய்து விடுகிறோம். மனோவியல் ரீதியாக இது எதார்த்த உண்மை என்பதை புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.
சரி இது வெறும் ஆயிரம், ஐநூறில் மட்டுமா என்றால் கொஞ்சம் உங்கள் வீட்டின் ஹாலில் சுற்றி பாருங்கள் 23,000 ரூபாய்க்கு சோபாவும், 45,000ரூபாய்க்கு டீவியும், பெட்ரூமில் 35,000 ரூபாய் கட்டில், டைனிங் டேபில் இன்னும் இனைப்பிகளாய் டேபில் மேட்டிலிருந்து தொப்பையை குறைக்கும் ரன்னர் வரைக்கும் கன்னதையும் சகட்டுமேனிக்கு வாங்கி குவித்திருப்பதை காணுங்கள். நிஜமாலும் இத்தகைய பொருட்கள் அனைத்தும் இவ்வளவு விலையில் நாம் கண்டிப்பாக வாங்கிதான் ஆக வேண்டுமா?
கார் வாங்கனுமா? மிக குறைந்த டவுன் பேமென் வெறும் 20,000 கொடுத்தால் அடுத்த சில மணி நேரங்களில் வீட்டு வரந்தாவில் கொண்டு போய்விடலாம். இனி மாதா மாதம் லோன் டியூ கட்டனும் என்பதை அந்த சில நிமிடங்களில் யோசிக்காமல் வாங்கி சிக்கி தினறி சீரளிபவர்களே அனேகம் பேர்.
இவ்வாறு உண்மையான தேவைக்கு என்றில்லாமல் சகட்டு மேனிக்கு பொருட்களை வாங்கி தினிப்பதையே மிகை நுகர்வு என்கின்றார்கள்.
சரி, 2000 ரூ நோட்டு வெளியிட்டதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்கின்றீர்களா?? வருகிறேன் பொருங்கள்.
பொதுவாக மால்களிலும், ஆன்லைனிலும் பொருட்களை சகட்டு மேனிக்கு வாங்குபவர்கள் கிரெடிட்/டெபிட் கார்டுகளையே பயன்படுத்துகிறார்கள். கையில் கத்தையாக ரூபாய் நோட்டுகளை எண்ணி கொடுப்பதற்கும் ஆன்லைனில் கார்டுகளை சுவேச் பன்னி பணம் செலுத்துவதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. அதில் எவ்வளவு தொகையை செலுத்தினாலும் அங்கலாப்போ அல்லது சுய முன் ஜாக்கிரதை உணர்வுகளோ தூண்டப்படுவது இல்லை என்பதே மன-உடல் ரீதியான சித்தாந்தங்கள் ஆகும்
டெல்லி, மும்பை, பெங்கலூரு நகரங்களில் வசிக்கும் உங்கள் சக நண்பர்களின் வாழ்க்கை முறைக்கு கொஞ்சம் உங்கள் புத்தியை கொண்டு சென்று வாருங்கள். நிலைமை எவ்வளவு வேகமாக உங்களை நெருங்கி கொண்டிருக்கிறது என்பது புரிய வரும்.
ஆக, கையில் ரொக்கமாக வைத்து செலவு செய்வதற்கும் மாறாக மின்னனு டிரன்சேக்சன் செலவு செய்வதற்குமான வித்யாசத்தை பெரு முதலாளிகள் கண்டறிந்து தங்கள் யுக்திகளால் பெரும் இலாபம் அடைகின்றார்கள்.
பெரும்பாலும் இத்தகைய கிரெடிட் கார்டு செலவுகளில் ஐ.டி. கார்ப்பரேட் நிறுவனங்களில் பணி புரிந்த "இளசுகளின் சீரளிவு கதைகளை 2010 - 13 ஆண்டுகளில் வாசித்திருப்பீர்கள். அதேபோல ஒரு நிலைமையை சாமானியன் கையில் இருக்கும் இந்த 2000 ரூபாய் தாளும் ஏற்படுத்தும்." என்பதே மக்களின் பயத்திற்கு காரணம். ஏநெனில் அரசு அனைத்து பண பரிமாற்றங்களையும் இவ்வாறே செய்ய அறிவுறுத்துகிறது.
வெறும் ஐந்து 2000 ரூபாய் தாள்களை ஸ்டைலாக நீட்டி பொருட்கள் வாங்குவதற்கும் 100 நூறு ரூபாய் தாள்கை கெட்டியாக பிடித்துக்கொண்டு கொடுப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது.
இப்படியாக அதிக அளவில் தேவையற்ற பொருட்களை வாங்கும்படியான மிகை நுகர்வு கலாச்சாரத்தை அரசு ஊக்குவிக்குமேயானால் பெரும் பொருளாதார சீரளி ஏற்படும் அபாயமும் ஒளிந்திருக்கிறது என்றே வல்லுனர்கள் கருதுகின்றனர்.
இன்னும் அடுத்தடுத்த மாதங்களில் இது தொடருமேயானால் 80 லட்சம் ரூபாய் 1 கோடி ரூபாய் கார்கள் சாலைகளில் அனாயசமாக ஓடுவதை காண முடியும். மக்கள் அதிக அளவில் ஆடம்பர பொருட்களை வாங்கி குவிப்பார்கள். இப்படி ஆடம்பரப்பொருட்களின் விற்பனை மேலோங்கும்போது சத்தமே இல்லாமல் அடிப்படை பொருட்களின் விலை தாறுமாறாக ஏறிவிடக்கூடும். அப்போது எவ்வளவு வேகமாக பொருட்களை வாங்கி குவித்தார்களோ அதைவிட அதிக கஸ்டங்களை சாமானிய மக்களின் தலையில் தூக்கி வைப்பார்கள்.
இப்படி இதுவும் ஒரு காரணமாக ஆகிவிடக்கூடாது என்பதைஉன்கூட்டியே உணர்ந்து அரசு செயல்பட்டால் அதை கை தட்டி வரவேற்போம்.
பாரத பிரதமர் மோடி பெரும் துணிச்சல்காரர் என்பதை நிறுபித்துவிட்டார். புத்திசாளி என்பதையும் விரைவில் நிறுபிப்பார் என்ற ஆவலுடன் சானியன்.
0 மக்களை ஏமாற்றுகிறதா மோடி விளம்பரம்?
ஆப் கா மோடிஜீ டூயிங் குட் டிராமா...
யோசிக்கத் தெரியாத சாதாரண மக்களிடம் தங்கள் வலிமையை காட்டிகொள்ளும் வகையில் வெகு அற்புதமான ஸ்டண்ட் ஆக்டிங் மட்டுமே இந்த வரலாற்று நிகழ்வு..
உண்மையில் கருப்பு பணத்தையும், பினாமி கலாச்சாரத்தையும் இது பெரிய அளவில் பாதிக்கப்போவதில்லை.
டாலராகவும், கோல்டாகவும், லேண்டாகவும் பதுக்கிய கருப்பு பணத்தை மீட்கமுடியாது என்பதை நன்கு தெரிந்தும், மக்களிடம் போலி ஸ்டண்ட் விளம்பரத்தை மோடி அரசாங்கம் வெற்றிகரமாக நிறைவேற்றியிருக்கிறது.
போலி கள்ளநோட்டுகளை ஒழிக்க சிறிதளவு பயன்படும் என்று கூப்பாடு போடும் சொம்புகளே அடிதட்டு மக்களின் வயிற்றில் அடித்தா இப்படி உங்கள் கேவலமான விளம்பரத்தை தேட வேண்டும்??
போதிய அவகாசமும், அறிவிப்பும் கொடுத்து முறையாக அறிவித்தாலும் கூட கள்ளநோட்டுகளை தடுக்கலாமே??!
ஏன் இப்படி சாதாரண குடிமக்களை மதிக்காமல் உங்கள் சர்வதிகாரத்தை காட்டுகிறீர்கள்??
விவரம் தெரிந்தவர்கள் எளிதாக புரிந்துகொள்வார்கள் இது மக்களுக்கு பயன்படாத ஒரு சுய விளம்பரயுக்தி மட்டுமே...
மங்காத்தா கிளைமேக்சில் பெயரளவிற்கு கொஞ்சூண்டு பணத்தை எரிச்சுட்டு மீதிய ஆட்டய போடுவாங்களே...? அதுபோலவே கருப்பு பணத்தை மீட்பதில் தோல்வி கண்ட மோடி அரசு தங்களின் மேல் மாயையை உண்டாக்கவே இவ்வாறான சர்வதிகாரபோக்கை காட்டியிருக்கிறது.
உண்மையில் மக்கள் நலன் பற்றி விரும்பியிருந்தால் பீதியடையாத வண்ணம், போதுமான முன் அறிவிப்பை வழங்கி அதிகளவில் பணமாற்று மையங்களை தற்காளிகமாகவேனும் ஏற்படுத்தி நீண்ட வரிசையில் அவதிக்குள்ளாகாமல், மக்களின் அன்றாட வாழ்வு பாதிக்காமல் இந்த திட்டத்தை செயல்படுத்தியிருக்க வேண்டும்.
தொற்று எங்கேயோ அங்கே தான் கத்தி வைக்கனும் தல..
உண்மையில் கருப்பு பணம் யாரிடம் இருக்கும்? ரியல் எஸ்டேட், அரசியல், கார்ப்பரேட், பண முதலைகள் தங்களின் கருப்பு பணத்தை 1000, 500 ரூபாய் நோட்டுகளாக கிணற்றிலும், சுவற்றிலும், மொட்டை மாடியிலும் தேமே என்று ஒளித்து வைத்திருப்பார்கள் என்று நம்புகிறீர்களா??
ஒன்றை புரிந்துகொள்ளுங்கள் தோழர்களே!!! இந்த பண மாற்று விவகாரம் வெற்றியா தோல்வியா என்பதை வரும் எதிகாலம் மட்டுமே தெரிவிக்கும். தேமே என்றிருப்பதற்கு பதில் ஏதேனும் செய்துவிடுவது நல்லது தான். ஆனால், அவ்வாறு செய்யும் நடவடிக்கைகள் சாமானிய நடுத்தரவர்க்கத்தை கொஞ்சமும் மதிக்காதவாறு செய்துகொண்டு அதிலும் தங்களின் மட்டமான அரசியல் விளம்பரத்தை தேடும் அரசின் போக்கானது, நாளைய நாட்களில் "தங்களின் காவிமயமான சர்வதிகார இந்தியாவை உருவாக்குவதற்கான சோதனை முன்னோட்டங்களோ? என்ற பயம்" சாமானிய மக்களிடம் உருவாக்குறது என்பதை மறுப்பதற்கு இல்லை.
ஆறேழு வருடங்களுக்கு முன்னால் சாதரணமாக 800 ரூபாய்க்கு ஒரு அயர்ன்பாக்ஸ் வாங்குறதுனா கூட கடைக்காரன் கடன் தரமாட்டான். ஆனால் இன்னைக்கு 45000 ரூபாய்க்கு ஒரு மரகட்டிலை ஐந்து நிமிடத்தில் சிபில் ஸ்கோர் செக் பன்னி லோன் சேங்சன் பன்னிகொடுத்துடறாங்க... இதில் உண்மையில் என்ன நடக்கிறது???
தேவையை மீறி கடனில் முழ்கும் மிகைநுகர்வு கலாச்சார நிலமையை இது உண்டாக்கும். 1.50 வட்டி என்பது பேங்கிற்கு பெரும் பலனை உண்டாக்குகிறது. ரிலைன்ஸ் போன்ற கார்ப்ரேட்கள் வெகு வேகமாக பைனான்ஸ் நிறுவனங்களை நிறுவி வருகிறது என்பதை காணமுடிகிறதல்லவா??
மாதம் தவறாமல் டியூ கட்டியே ஆகவேண்டும். இதனால் தங்களின் பணம் பெருக்கப்படுகிறது என்பதாலேயே வங்கிகள், தனியார் நிறுவனங்கள் கூவி கூவி லோன் கொடுத்துக்கொண்டிதுக்கின்றன. இதில் அதிகமாக சிக்கி சீரழிபவர்கள் நடுத்தரவர்க்கமே..!
ஆக, பேங்கிங் மின்னனு பறிமாற்றங்களில் என ஆயிரம் ரூபாய் டெபாசிட் பன்னவோ, எடுக்கவோ முயன்றாலும் 20 ரூபாயாவது சர்வீஸ் சார்ச் கொடுத்து ஏமாற்றப்பட்டு சீரளிந்துகொண்டிருக்கிறோம். இதில் பெரும் பணமுதலைகளுக்கு லாபத்தை தவிர பாதகம் எதுவுமில்லை. ஆனால் நமக்கு???
இன்னும் 8 வருடங்களில் பெரும் பொருளாதார சீர்கேட்டை நாம் சந்திக்க இருக்கிறோமோ என்ற பயம் சூழ்கிறது. மக்களும் அதிகாரிகளும் யோசித்து செயல்படுவது நல்லது.
வாக்களித்த பஞ்சாப் மக்கள் தங்களது ஆம் ஆத்மி எம்பி பகத்சிங் மான்யிடம் கேள்வி.
0 இந்தியா முழுவதும் பின்பற்றலாம் அருமையான ஆம் ஆத்மியின் பட்ஜெட்
தில்லியில் புதிய வரிகளில் அல்லாத, மதிப்புக் கூடுதல் வரி விதிப்பை முறைப்படுத்தி ரூ. 46 ஆயிரம் கோடிக்கான பட்ஜெட்டை ஆளும் ஆம் ஆத்மி அரசு தாக்கல் செய்தது. இதில் கல்வித் துறைக்கும், சுகாதாரத் துறைக்கும் முக்கியத்துவம் அளித்து அதிகப்படியான நிதியை தில்லி அரசு ஒதுக்கி உள்ளது.
தில்லி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-ஆவது நாள் அலுவல் திங்கள்கிழமை பிற்பகல் 2 மணிக்கு தொடங்கியது. இதில் 2016-17 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை துணை முதல்வரும், நிதியமைச்சருமான மணீஷ் சிசோடியா தாக்கல் செய்து பேசியதாவது:
நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதியை செய்யவும், தில்லி அரசின் திட்டங்கள் சாதாரண மக்களையும் சென்றடையும் வகையிலும் மாவட்ட நிர்வாகங்களை "இ-டிஸ்ரிக்ட்' என்ற பெயரில் கணினிமயமாக்கியுள்ளோம்.
வைஃபை வசதி: உள்கட்டமைப்பின் முக்கிய அம்சமான "வைஃபை நெட்வொர்க்' (கம்பியில்லா இணைய வசதி) திட்டத்தை முழு வீச்சில் செயல்படுத்தும் சாத்தியக்கூறுகளை ஆரராய்ந்து வருகிறோம். பட்ஜெட் உருவாக்கத்தில் பொது மக்கள் பங்கேற்க வகை செய்யும் "ஸ்வராஜ் நிதித் திட்டம்' கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. இத்திட்டம் 11 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டம் அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் நீட்டிக்கப்படுகிறது. இதன்படி ஒவ்வொரு மொஹல்லா சபாவுக்கும் நிதி வழங்கப்படும். "சிட்டிசன் லோக்கல் ஏரியா டெவலப்மன்ட்' திட்டத்துக்காக பட்ஜெட்டில் ரூ. 350 கோடி ஒதுக்கப்படுகிறது.
கல்வித் துறைக்கு ரூ.10,690 கோடி: தில்லி அரசு பள்ளிகளின் கல்வித்தரத்தை மேம்படுத்த முதல் கட்டமாக பள்ளிகளுக்குத் தேவையான உள்கட்டமைப்பு; இரண்டாம் கட்டமாக திறமையான ஆசிரியர்களை நியமிப்பது; மூன்றாம் கட்டமாக பாடத்திட்டத்தை மேம்படுத்துவது என்ற வகையில் கல்வித்துறையை மேம்படுத்தி வருகிறோம்.
தற்போது, 8 ஆயிரம் வகுப்பறைகள் கட்டப்பட்டு வருகின்றன. பள்ளி ஆசிரியர்களுக்கு தரமான பல்கலைக்கழங்கள் மூலம் பயிற்சி வழங்க ரூ.102 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
தில்லியில் விளையாட்டுப் பள்ளி, விளையாட்டுப் பல்கலைக்கழகத்தை ரூ. 48 கோடி செலவில் தொடங்குவது பற்றி ஆராய்ந்து வருகிறோம். பள்ளிகள் மாணவர்களுக்கு திறன் கல்வியை வழங்க ரூ. 152 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆக மொத்தம் கல்வித்துறைக்கு வரும் நிதியாண்டு பட்ஜெட்டில் ரூ. 10,690 கோடி ஒதுக்கப்படுகிறது.
சுகாதாரத்திற்கு ரூ.5,259 கோடி: தரமான சுகாதார சேவை ஏழை மக்களின் குடியிருப்பு வரை சென்றடைவதை உறுதி செய்ய இந்த ஆண்டு இறுதிக்குள் 1000 மொஹல்லா கிளினிக்குகள் தொடங்கப்படும். 150 பாலி கிளினிக்குளும் தொடங்க உத்தேசித்துள்ளோம். சில மருத்துவமனைகள் "சூப்பர் ஸ்பெஷாலிட்டி' மருத்துவமனைகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. பட்ஜெட்டில் சுகாதாரத்துறைக்கு ரூ. 5,259 கோடி ஒதுக்கப்படுகிறது.
போக்குவரத்து: தாழ்தள சொகுசு ரக 1000 புதிய பேருந்துகள், "கிளஸ்டர்' திட்டத்தின் கீழ் ஆயிரம் பேருந்துகள் வாங்க திட்டமிட்டுள்ளோம். துவாரகாவில் சுமார் 1,397 பேருந்துகள் நிற்கும் வகையில் புதிய ஐஎஸ்பிடி பேருந்து நிலையத்தை தனியார் - அரசு கூட்டுத் திட்டத்தின் கீழ் உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம்.
இ-ரிக்ஷாக்களுக்கு வழங்கப்படும் மானியம் ரூ. 15 ஆயிரத்திலிருந்து ரூ. 30 ஆயிரமாக உயர்த்தப்படும். பேட்டரி மூலம் இயங்கும் வாகனங்களின் விற்பனையை ஊக்கவிக்க அந்த வாகனங்களுக்கான பதிவுக் கட்டணம் ரத்து செய்யப்படும். பொதுப் போக்குவரத்துக்காக பட்ஜெட்டில் ரூ. 1,735 கோடி ஒதுக்கப்படுகிறது.
சாலைத் திட்டங்கள்: ஜவாஹர்லால் நேரு விளையாட்டு அரங்கம் தொடங்கி ஐஎன்ஏ வரையில் ரூ. 1,261 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் பாரபுல்லா 2-ஆவது கட்ட மேம்பாலச் சாலைத் திட்டம் இந்த ஆண்டுக்குள் செயல்படத் தொடங்கும்.
ஆனந்த் விஹார் முதல் பீராகரி வரையிலான 29 கி. மீட்டர் தொலைவுடைய கிழக்கு மேற்கு காரிடர் திட்டம், வாஜிராபாத் முதல் ஏர்போர்ட் வரையிலான 25 கி.மீ. தூரமுள்ள வடக்கு-தெற்கு சாலை இணைப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்படும். பொதுப் போக்குவரத்தை மேம்படுத்தவும், சைக்கிள் ஓட்டுவதை ஊக்குவிக்கவும், பாதசாரிகள், மாற்றுத்திறனாளிகளுக்கு உகந்த சாலைகளை உருவாக்க 11 சாலைகள் மறுநிர்மாணம் செய்யப்படும். சாலை திட்டங்களுக்காக பட்ஜெட்டில் ரூ. 2,208 கோடி ஒதுக்கப்படுகிறது.
சமூகப் பாதுகாப்பு: கீதா காலனி, ஜனக்புரி, சரிதா விஹார், வசந்த் குன்ஜ் ஆகிய பகுதிகளில் முதியோர் இல்லங்களுக்காகவும், மனவளர்ச்சிக் குன்றியோர் தங்குவதற்கு உஸ்மான்பூர், தல்லுபுரா பகுதிகளில் இல்லம் கட்டுவதற்கும் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. தில்லியில் 42 ஆயிரம் இருள் சூழ்ந்த பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. அந்த பகுதிகளில் போதுமான தெரு விளக்கு வசதி ஏற்படுத்தப்படும். சமூகப் பாதுகாப்பு, சமூக நலத்துறைத் திட்டங்களுக்காக பட்ஜெட்டில் ரூ. 1,381 கோடி ஒதுக்கப்படுகிறது.
குடிநீர் விநியோகம்: 2017-ஆம் ஆண்டு டிசம்பருக்குள் அனைத்து குடியிருப்புகளுக்கும் குடிநீர் விநியோகம் அளிக்கப்படும். வரும் நிதியாண்டில் 300 அங்கீகாரமற்ற காலனிகளுக்கு குடிநீர் விநியோகிக்கப்படும். குடிநீர் விநியோகத் திட்டங்களுக்கு பட்ஜெட்டில் ரூ. 1,976 கோடி ஒதுக்கப்படுகிறது.
கலை, கலாசாரம்: தில்லியில் கலை, கலாசாரம், மொழி மேம்பாட்டுக்கு பட்ஜெட்டில் ரூ. 54 கோடி ஒதுக்கப்படுகிறது. சுற்றுலாத்துறை மேம்பாட்டுத் திட்டங்களுக்கு ரூ. 10 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கப்படுகிறது.
ஆம் ஆத்மி உணவகங்கள்: தில்லிவாழ் ஏழை தொழிலாளர்கள், ரிக்ஷா ஓட்டுநர்கள் ஆகியோருக்கு குறைந்த விலையில் ஆரோக்கியமான உணவு கிடைத்திடும் வகையில் "ஆம் ஆத்மி உணவகங்கள்' விரைவில் தொடங்கப்படும். இதற்காக வரும் நிதியாண்டில் ரூ. 10 கோடி ஒதுக்கப்படுகிறது என்றார் மணீஷ் சிசோடியா.
மேற்கண்ட பட்ஜெட்டில் கல்வி, சுகாதாரம், பொது போக்குவரத்து ஆகிய துறைகளுக்கு தில்லி அரசு மிகவும் முக்கியத்துவம் கொடுத்துள்ளது. இதன்படி திட்டமிட்ட செலவினமாக ரூ. 20,600 கோடியும் திட்டமிடப்படாத செலவினங்களுக்காக ரூ. 26,000 கோடியையும் தில்லி அரசு ஒதுக்கியுள்ளது.
முக்கிய அம்சங்கள்
* கல்வித் துறைக்கு ரூ.10,690 கோடி.
* சுகாதாரத் துறைக்கு ரூ.5,259 கோடி.
* போக்குவரத்துத் துறைக்கு ரூ.1,735 கோடி.
* மூன்று மாநகராட்சிகளுக்கும் ரூ.6,919 கோடி நிதி.
* பெண்கள் பாதுகாப்புக்கு ரூ.1,068 கோடி.
* சமூக பாதுகாப்பு மற்றும் நலத் திட்டங்களுக்கு ரூ.1,381 கோடி.
* ஆம் ஆத்மி உணவகங்கள் அமைக்க ரூ.10 கோடி.
* அரசு பள்ளி வகுப்பறைகளில் சிசிடிவி பொருத்தும் திட்டத்துக்கு ரூ.100 கோடி.